கஜா புயலின் போது தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கை நகல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளர் திருப்புகழ், ஆய்வறிக்கையின் நகலை முதலமைச்சரிடம் வழங்கினார். அப்போது, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த ஆய்வறிக்கையில் கஜா புயலினை முன்னிட்டு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் அதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகள், எதிர்காலத்தில் எப்படி பணியாற்ற வேண்டும் ஆகிய தலைப்புகளில் விரிவான அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post