தீபாவளிக்கு பிகிலுடன் மோதும் கைதி…

கார்த்தி நடிக்கும் கைதி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

“மாநகரம்”படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தியை வைத்து “கைதி” படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை அடுத்து விஜயயை வைத்து தளபதி 64 படத்தினை இயக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிவுள்ளது.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கைதி” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.விரைவில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு படத்தின் டீசர் வெளியாகி கார்த்தி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது.மேலும் இப்படத்தில் அஞ்சாதே படத்தின் கதாநாயகன் நரேன், யோகிபாபு,ஜார்ஜ் மரியான், ரமணா, தீனா, வாட்சன் சக்கரவர்த்தி, மகாநதி ஷங்கர், பொன்வண்ணன், தலைவாசல் விஜய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக S.R. பிரபு மற்றும் S.R. பிரகாஷ் பாபு தயாரித்துள்ளனர். இப்படத்தில் கதாநாயகியுடனான ரொமேன்ஸ் காட்சிகள் அதிகளவில் இடம்பெறவில்லை எனவும், இரவு நேர காட்சிகளே அதிகளவு இடம்பெற்றுள்ளது எனவும் தகவல் வெளியாகிவுள்ளது.

இந்நிலையில் கைதி திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Exit mobile version