தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரும் மற்றும் இயக்குநருமான கே.விஸ்வநாத் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு தற்போது 92 வயது. தெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரை ‘கலா தபஸ்வி’ என் அழைக்கப்ப்டும் கே.விஸ்வநாத் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தவர்.இவர் சென்னையில்தான் திரைப்பட வாழ்க்கையினைத் தொடங்கியிருக்கிறார். 1975ல் இவர் இயக்கிய ஆத்ம கெளரவம் என்ற திரைப்படத்திற்காக நந்தி விருது வாங்கியிருக்கிறார். தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து போன்றத் திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
ஐம்பதிற்கு மேற்பட்டத் திரைப்படங்களை இவர் இயக்கியிருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை இவர் நடிகராகவே அதிகம் தெரிந்தவர். குறிப்பாக குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி, ராஜபாட்டை போன்றத் தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் திரைப்படத்துறைக்கான மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளார். தற்போது இவர் மறைந்துள்ள செய்தி திரைப்படத்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Discussion about this post