ஸ்டெர்லைட் வழக்கை விசாரித்து வந்த அமர்வில் இருந்து நீதிபதி சசிதரன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி சசிதரன், தலைமை நீதிபதிக்கு தெரிவித்துள்ளார். மேலும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றவும் அவர் பரிந்துரை செய்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்த வழக்கில் தான் தீர்ப்பு வழங்கியுள்ளதால், வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது, நீதிபதி சத்தியநாராயணன் மதுரைக் கிளையில் உள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆஷா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வர இருந்தது. நீதிபதி சசிதரன் விலகியதையடுத்து ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வை பிற்பகலில் தலைமை நீதிபதி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Discussion about this post