வெனிசுலாவின் தற்காலிக அதிபராக ஜூவான் கெய்டோ தன்னைத்தானே பிரகடனப் படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வெனிசுலாவில் அதிபர் மதுராவிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட கிளர்ச்சியில் வன்முறை வெடித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் நிகோலஸ் மதுரா, 67 சதவிகித வாக்குகள் பெற்று பதவியை தக்க வைத்துக் கொண்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஹென்றி பால்கோன் 21 சதவிகித வாக்குகள மட்டுமே பெற்றார்.
அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், வெனிசுலாவின் நாடாளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை தற்காலிக அதிபராக பிரகடனம் செய்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், நிகோலஸ் மதுரா அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
Discussion about this post