திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பத்திரிகையாளரை திமுகவினர் தாக்கியும், ஸ்டாலின் கண்டு கொள்ளாததால் பத்திரிகையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் அதிருப்தி ஏற்பட்டது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில், மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், சாலையின் நடுவில் மேடையமைத்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
மேடையில், கட்சி நிர்வாகி ஒருவர் பேசி கொண்டிருந்தபோது, அவரை நாளிதழ் செய்தியாளர் புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது, பின்னால் அமர்ந்திருந்த திமுகவினர், புகைப்படம் எடுத்த செய்தியாளரை இருக்கையில் உட்காரும் படி கூறியுள்ளனர். புகைப்படம் எடுத்து விட்டு அமர்வதாக செய்தியாளர், கூறியும் அவரை திமுகவினர் தகாத வார்த்தைகளால் வசைபாடியதாக தெரிகிறது.
Discussion about this post