விழுப்புரம் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நீண்டகாலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து வேலைக்காக காத்திருப்போர் பயன்பெறும் வகையில், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தனியார் துறையை சேர்ந்த 63 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில் 3ஆயிரத்து 187 பேர் பங்கேற்றனர். இதில் 673 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பணி நியமன ஆணையை உடனடியாக வழங்கினார்.
Discussion about this post