ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவின் ஜிதேந்தர் குமார் ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதில், 57 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் ரவி குமார் தங்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், 74 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜிதேந்தர் குமார் முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் மங்கோலியாவின் ஸன்தான்புத்தை 2- 1 என வீழ்த்தினார்.
இந்த தொடரின் இறுதி நாளான இன்று இறுதி போட்டியில் கஜகஸ்தானின் கைசனோவை எதிர்கொள்கிறார். இந்நிலையில், இறுதி போட்டியில் வெற்றி பெறுவதற்கு முன்பே ஓலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
இதை தொடர்ந்து ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஜிதேந்தர் தங்கம் வெல்ல பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post