ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடி ஆஃபர்களை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ , சமீபத்தில் நடைமுறைப்படுத்திய உயர்த்தப்பட்ட மொபைல் கட்டணங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட IUC நிமிடங்களுடன் கூடிய திட்டங்களால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். மற்ற நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் கட்டணத்தை உயர்த்தினாலும் மற்ற நிறுவன நெட்வொர்க்கிற்கு இலவச அன்லிமிடெட் கால் எனும் வசதியை வழங்கியது. இந்த அறிவிப்பு ஜியோவிற்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
மேலும் இதற்கு நிச்சயம் ஜியோ நிறுவனம் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது புதிய திட்டங்களை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம் திரும்ப கொண்டுள்ளது. ஆனால் அனைவரும் எதிர்பார்த்த இலவச அன்லிமிடெட் கால் சேவையை ஜியோ நிறுவனம் அறிவிக்கவில்லை. ரூ.149 திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா,100 எஸ்.எஸ்.எஸ், ஜியோ – ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கான 300 நிமிடங்கள் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக 2ஜிபி டேட்டாவும், ஜியோ – ஜியோ இலவச அழைப்புகளை வெறும் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் தருகிறது.
Discussion about this post