கோடையையொட்டி அனைவரின் விருப்பத்திற்குரிய தேர்வான ஜிகர்தண்டாவின் விற்பனை அதிகரித்துள்ளதாக மதுரை வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மதுரையின் அடையாளமாக உள்ள ஜிகர்தண்டா எனப்படும் பானம் மதுரையில் மட்டுமின்றி தமிழகமெங்கும் மக்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக உள்ளது. கோடை காலத்தில் மட்டுமின்றி அனைத்து காலங்களிலும் மக்கள் ஜிகர்தண்டாவை விரும்பி சுவைக்கின்றனர். அதிலும் மதுரையில் கிடைக்கும் ஒரிஜினல் ஜிகர்தண்டாவின் சுவைக்கு ஈடு இணை இல்லை என்பது மக்களின் கருத்து.
இந்நிலையில் கோடையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜிகர்தண்டாவின் விற்பனை அதிகரித்துள்ளதாக அம்மாவட்ட வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாளோன்றுக்கு ஆயிரம் கிளாஸ்களுக்கும் அதிகமாக விற்பனை ஆவதாக அவர்கள் கூறியுள்ளனர்.கடல்பாசி கலந்து செய்யப்படும் ஜிகர்தண்டாவின் சுவை மயக்கும் வகையில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post