ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம் எல் ஏக்கள் 41 பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்திற்கு நடந்த சட்ட சபைத் தேர்தலில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இத்தேர்தலில் வெற்றி பெற்ற 41 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் 30 எம் எல் ஏ க்களில் 17 பேர் மீதும் காங்கிரசின், 16 எம் எல் ஏ க்களில், எட்டு பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதேபோல் பாஜகவின், 25 எம் எல் ஏ க்களில், 11பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டசபையில் இந்த எண்ணிக்கை 55 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது
Discussion about this post