காஞ்சி சங்கர மடத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் முதலமாண்டு நினைவு விழாவில், தமிழக ஆளுநர் கலந்து கொண்டு புதிய அஞ்சல் உறையை வெளியிட்டார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சங்கர மடத்தின் மூலம் பல்வேறு தொண்டுகளை செய்து, கடந்த ஆண்டு உயிரிழந்தார்.
அவரது முதலமாண்டு நினைவு விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குறித்து அவர்களுடன் பழகியவர்கள் நினைவு கூறும் புத்தகத்தை வெளியிட்ட ஆளுநர், பின்னர், ஜெயேந்திரர் உருவம் பதித்த அஞ்சல் உறையை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர், ஜெயேந்திரர், அனைத்து தரப்பு மக்களையும் சமமாக பாவித்து அவர்களின் அன்புக்கு காரணமாக இருந்து, காஞ்சி மடத்துக்கு பெருமை சேர்த்தவர் எனக்குறிப்பிட்டார்.
Discussion about this post