இங்கிலாந்தில் விருந்தினராக வந்த அரபு நாட்டைச் சேர்ந்தவருக்கும், ஹோட்டல் ஊழியருக்கும் இடையே நடந்த உரையாடல் ஒன்று, ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
90-ஸ் கிட்ஸ்களோட ஃபேவரைட் ஷோண்னு சொன்னா, அது டாம் & ஜெர்ரி. பூனைக்கும் எலிக்கும் நடுவுல நடக்கும் சண்டை தான் இந்த ஷோவோட கான்செப்ட். உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இந்த ஷோ, வசூல்லயும் கல்லா கட்டுச்சு. இப்ப எதுக்கு இந்த டாம் & ஜெர்ரி கதைன்னு கேட்கிறீங்களா..?
அரபு நாட்ட சேர்ந்த ஒருத்தர், இங்கிலாந்துக்கு சுற்றுலா போயிருக்கார். அங்க, ஹோட்டல் அறைல தங்கின அவரு, அங்க ஒரு எலிய பாத்துட்டார். உடனே ரிசப்ஷனுக்கு போன் செஞ்சவருக்கு, எலிக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்வாங்கன்னு மறந்துட்டார். `ரூம்ல எலி இருக்குன்னு சொல்லணும்’… ஆனா அவரு `என் ரூம்ல ஜெர்ரி இருக்கு வந்து உதவி பண்ணுங்கன்னு’ மெசேஜ் பாஸ் பண்ணிட்டார். இந்த வீடியோதான் இணையத்தில் டிரெண்டாகிட்டு இருக்கு.
வீடியோவுக்கு, டாம் & ஜெர்ரி கான்செப்ட்ல, ட்விட்டர்வாசிகள் போட்ட மீம் வைரலாகிட்டு வருது. ட்விட்டர்ல இருக்கற அந்த வீடியோல, போன்ல நடக்கற உரையாடல்கள் பதிவாகியிருக்கு. அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர், வெளிநாடு சென்றதாகவும், மொழி பிரச்னையால, எலி இருக்கிறது அப்படீங்கறத எப்படி சொல்றார்னு பாருங்கன்னு பதிவாகியிருக்கு.
`சார் நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்’ என அந்த வீடியோ தொடங்குகிறது. , “ஹலோ.. என்னுடைய ஆங்கிலம் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. உங்களுக்கு டாம் & ஜெர்ரி தெரியுமா எனக் கேட்கிறார். அதற்கு ஹோட்டல் ஊழியர் தெரியும் என பதிலளிக்கிறார். ஜெர்ரி என்னுடைய அறையில் இருக்கிறது உங்களால் வரமுடியுமா?” என்கிறார்.
அதற்கு ஊழியரோ, `உங்களுடைய அறையில் எலி (மவுஸ்) இருக்கிறதா’ என கேட்கிறார். ஆம், என பதிலளித்துவிட்டு, `நீங்கள் டாமை அழைத்து வாருங்கள்’ என்றார். அதற்கு, `நாங்கள் டாமை வளர்க்கவில்லை’ என ஹோட்டல் ஊழியர் பதிலளிக்கிறார். சரி பரவாயில்லை… நீங்கள் வந்து உதவி செய்யுங்கள்’ என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதேபோல் டாமை வைத்து பல மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனா ஒண்ணு, சுற்றுலா வந்த அந்த அரபு நாட்டவர், 90’s kids என்பது மட்டும் தெளிவா தெரியுது. அப்புறம்… உங்க ரூம் ல டாம் இருக்கா?
Discussion about this post