திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட சோதனையில் 326 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 522 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வந்தவாசியை அடுத்த கொடியாலத்தில் வட்டாட்சியர் பாஸ்கர் தலைமையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை மடக்கி அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கொடியாலம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரது டிராக்டரில் அனுமதியின்றி எடுத்து செல்லப்ப்டட 125 டெட்டனேட்டர்கள் மற்றும் 109 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர்.
இதைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சேகர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்ப்டடது. இதில் குளியலறையில் 397 டெட்டனேட்டர்கள் மற்றும் 217 ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்த தெள்ளார் காவல்நிலைய போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post