டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
ஆந்திராவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 22 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைப்பதற்கான உரிமையை ஜெகன்மோகன் ரெட்டி கோரினார். இந்தநிலையில் ஆட்சி அமைக்க வருமாறு ஜெகன் மோகனுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இந்தநிலையில், இன்று டெல்லி சென்ற ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.