மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுமான பணிகள் இரண்டு மாதத்திற்குள்ளாக நிறைவு பெறும் வகையில் நடைபெற்று வருகின்றன.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம்தேதி மரணமடைந்தார். அவரது உடல் புரட்சித்தலைவர் எம் ஜி.ஆரின் நினைவிடத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் தைரியத்தை பறைசாற்றும் விதத்தில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் நினைவு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார். தற்போது நினைவு மண்டபம் கட்டிட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இரண்டு மாதத்திற்குள்ளாக இந்த பணிகள் நிறைவு பெறும் என கூறப்படுகிறது.