சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச் சிலை திறக்கப்பட்டது. இந்தநிலையில், புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வந்தது. அந்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, ஜெயலலிதாவின் புதிய சிலையை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும் சிலையை திறந்து வைத்தனர்.
பின்னர், ஜெயலலிதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைதொடர்ந்து, அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவின் புதிய சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Discussion about this post