பழமை வாய்ந்த கோயில்கள், ஜிகர்தண்டாவுக்கு பெயர் போன மதுரைக்கு, பேமஸ் மல்லிகை தான். அப்படி பட்ட மல்லிகைப் பூ உள்ளிட்ட பூக்களின் விலை, பலமடங்கு உயர்ந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டும் மாட்டுத்தாவணி பூச்சந்தையில் மல்லிகைப் பூவின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. 400 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ ஒரே நாளில் 600 ரூபாய் உயர்ந்து 1,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மல்லிகை மட்டுமல்லாமல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. சம்பங்கிப் பூவின் விலை 60 ரூபாயிலிருந்து உயர்ந்து 250 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்பனையான முல்லைப்பூ 1000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல் பிச்சி பூ 900 ரூபாய்க்கும், செவ்வந்தி 150 ரூபாய்க்கும், ரோஜா 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. செப்டம்பர் 12 ஆம் தேதி வரை முகூர்த்த நாளாக இருப்பதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.