இப்போது நாம் வாழும் சூழ்நிலையில் 50 வயதை தாண்டுவதே மிகவும் அதிசயமான ஒன்றாக மாறிவிட்டது.அப்படி இருக்கும் நிலையில் 116 வது வயதில் மிகவும் சுறுசுறுப்பாக வாழ்ந்து வருகிறார் ஜப்பான் பாட்டி.கேன் டனாகா என்பவர் 1903 ஆம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி பிறந்துள்ளார்.இவருக்கு 1922 ம் ஆண்டு திருமணமாகியது.இந்த தம்பதியினருக்கு 4 குழந்தைகள் இருந்தனர்.5 வதாக இவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்தும் வளர்த்துள்ளனர்.தற்போது அவருக்கு 116 வயது ஆகிய நிலையில் உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
ஓய்வாக இருக்கும் நேரங்களில் கணக்கு பாடங்களை படிக்கும் பழக்கம் இவருக்கு இருக்கிறதாம்.மேலும் கேரம் ,செஸ் போன்ற விளையாட்டுகளையும் ஆர்வமாக விளையாடுவாராம்.இவருக்கு சாக்லேட் சாப்பிடுவது, ஜூஸ் குடிப்பது போன்றவை மிகவும் பிடித்தமான ஒன்று , ஒரே நாளில் 100 சாக்லேட் சாப்பிடுவது தான் இவரது ஆசையாம்
ஏற்கனவே 122 வயது வரை வாழ்ந்தவர்கள்,116 வயது வாழ்ந்தவர்கள் என கின்னஸ் வேல்டு ரெக்கார்ட்ஸில் பலர் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது 116 வயதுடைய ஜப்பான் பாட்டி கேன் டனாகா இடம்பெற்றிருக்கிறார்.இதில் ஜப்பானில் தான் வயதானவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post