ஐப்பான் அரசு திமிலங்களை வேட்டையாடுவதை தடுக்கும் IWC அமைப்பிலிருந்து வெளியேறி உள்ளதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மீனவ மக்களின் வாழ்வாதாரத்தில் திமிங்கல வேட்டை முக்கிய இடத்தில் இருப்பதாலும் ஜப்பான் நாட்டில் பொருளாதாரம் மேம்பாடு அடையவும் IWC அமைப்பிலிருந்து விலகியதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
ஜப்பான் அரசின் இந்த அறிவிப்புக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜப்பான் அரசு தமது நடவடிக்கையை பரீசிலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இருந்த திமிலங்கள் IWC அமைப்பிற்கு பிறகுதான் அவைகள் காப்பாற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.