அப்பா தயாரிக்க, மகள் நடிக்க : அசத்தல் ’தல 60’

வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தல 60’ படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் தமிழில் ’நேர்கொண்ட பார்வை’ என ரீமேக் செய்யப்பட்டுள்ளது.இப்படத்தில் அஜித்குமார் வழக்கறிஞராக நடித்துள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

இப்படத்தினை போனி கபூர் தயாரிக்கிறார்.இப்படத்தில் முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் இந்தியில் ‘பிங்க்’ படத்தில் நடித்த ஆண்ட்ரியா தாரங் நடித்துள்ளனர்.இப்படத்தில் நடிகை வித்யா பாலன் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தல அஜித்தின் அடுத்த படம் குறித்தும் அப்டேட் வெளியாகியுள்ளது.இந்த படத்தையும் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்க உள்ளார்.அதில் அஜித் வயதான தோற்றத்தில் நடிக்க உள்ளராம், அவருக்கு மகளாக ஸ்ரீதேவி-போனி கபூர் இருவரின் மகளான ஜான்வி கபூர் நடிக்க உள்ளார்.இப்படத்தின் மூலம் தான் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளார்.இதுகுறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அளிக்கவில்லை.ஆனால், அடுத்த மாதம் இறுதியில் தல ‘60’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version