அஜித்துக்கு வில்லன் ஆகிறாரா எஸ்.ஜே.சூர்யா ?

இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது வில்லனாக கலக்கிக்கொண்டிருப்பவர் தான் எஸ்.ஜே.சூர்யா.இவரின் ’இருக்கு ஆனா இல்ல’ என்ற டையலக் இன்று பார்த்தாலும் சிரிக்க வைக்கும் ஒன்று.

2018ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து பாராட்டை பெற்றார்.அதே போல் ஸ்பைடர் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

தற்போது மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கவிருக்கும் வலிமை படத்தில் எஸ்.ஜே.சூர்யா அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.ஆனால் இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை .மேலும் போனி கபூர், அஜித், ஹெச்.வினோத் கூட்டணி வலிமை படத்தில் இரண்டாவது முறையாக இணைவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version