பெங்களூருவில், லஞ்சம் வாங்கிய வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்பிடென்ட் குழுமத்திடம் லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக, பாஜக-வைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டிக்கு, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனார்தன் ரெட்டி தலைமறைவாகிவிட்டதாகவும், மூன்று நாட்களாக அவரை காணவில்லை என்றும் கூறப்பட்டது.
ஆனால், தான் தலைமறைவாகவில்லை என்றும், ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை அன்றே மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் முன் ஆஜராக இருப்பதாவும் கூறி, வீடியோ ஒன்றை ஜனார்தன் ரெட்டி வெளியிட்டார்.
அதில் கூறியபடி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜரான அவர், விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
Discussion about this post