சென்னை தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் சார்பில் பொதுமக்களுக்கான அரசு ஜமபந்தி கூட்டத்தில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் சார்பில் பொதுமக்களுக்கான அரசு ஜமபந்தி கூட்டம் நடைபெற்றது. இதில், தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர் ராஜா தலைமையிலான தி.மு.க.வினர் பொதுமக்கள் மீது நாற்காலிகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இதனை தட்டிக்கேட்ட அ.தி.மு.க.வினர் மீதும் தி.மு.க.வினர் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பரங்கிமலை துணை ஆணையாளர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க.வினர் நடத்திய அராஜகத்தின் காரணமாக வருவாய் தீவாயக்கூட்டம் நாளை ஒத்தி வைக்கப்பட்டது.
Discussion about this post