திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புனித அந்தோணியார் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றன. இந்த ஜல்லிக்கட்டு களத்தில் காளையா? காளையர்களா? என்ற கடும் போட்டி நிலவியதால் களமே களைகட்டியது.
போட்டியில் சுமார் 500 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றனர்.இதில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பங்கேற்று ரசித்துவருகின்றனர்.
Discussion about this post