100 ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாப்பில் நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து வரலாறின் அவமானமான கறை என இங்கிலாந்து பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியப் சுதந்திர போராட்டத்தின்போது கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜாலியன்வாலா பாக்கில் பொதுமக்கள் ஒன்று கூடி அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்தினர். அப்போதைய இங்கிலாந்து ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.
இந்த சம்பவம் நடந்து வரும் 13ஆம் தேதியுடன் 100 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, ஜாலியன்வாலா பாக் படுகொலை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து வரலாறின் அவமானகரமான ஒரு கறையாகும் என வேதனை தெரிவித்துள்ளார்.
Discussion about this post