ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசார், கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர், பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மசூத் அசார் குறித்து இரண்டு மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் இந்திய படைகள் நடத்திய தாக்குதலில், மசூத் அசார் காயம் அடைந்ததாகவும், அதே நேரத்தில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. மசூத் அசார் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவரது மரணம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post