ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்தின் போது தொண்டர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியால் அப்பகுதி கலவரம் போல் காட்சியளித்தது.
ஆந்திர மாநிலத்தில், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி மாநிலத்தின் முக்கிய கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரம் மயிலாவரம் பகுதியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரம் முடிந்த பிறகு அவரது வாகனத்தை தொண்டர்கள் சிலர் சூழ்ந்ததால், போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதி கலவரம் போல் காட்சியளித்தது, கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டியை சூழ்ந்த தொண்டர்களில் ஒருவர் அவரை கத்தியால் தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் ஜெகன்மோகனின் பாதுகாப்பு கருதி தடியடி நடத்தப்பட்டதாக காவ்ல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post