சுராணா நிறுவனத்தின் லாக்கரில் இருந்து 104 கிலோ தங்கம் மாயமான வழக்கை விசாரித்த ஏ.டி.எஸ்.பி. வெள்ளை பாண்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சி.பி.ஐ. வசம் இருந்த சுராணா நிறுவனத்தின் 104 கிலோ தங்கம் மாயமான வழக்கு குறித்து சிபிசிஐடி காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தங்கம் மாயமான வழக்கு குறித்து ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி. வெள்ளை பாண்டியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் தான் விசாரணை அதிகாரியாக இருந்தபோது பாரிமுனையில் உள்ள சுராணா அலுவலக லாக்கரில் 400 புள்ளி 47 கிலோ தங்கம் இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். தான் வழக்கு விசாரணையில் இருந்து விடுபட்ட பிறகு தங்கம் மாயமானது குறித்து தமக்கு தெரியாது என்றும் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி வெள்ளை பாண்டியிடம் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். தொடர்ந்து சுராணா நிறுவன உரிமையாளர்கள், கடன் வழங்கிய வங்கி அதிகாரிகளிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post