ஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் இந்திய ரூபாயில் மேற்கொள்ளப்படுவதால், அந்நிய செலாவணி பெருமளவு மிச்சமாவதாக இந்திய ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் தனியார் அமைப்பு இணைந்து, நெடுஞ்சாலைகளில் உயர்தர உணவகம் திறக்கப்பட்டது. இதனை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சித்தார்த்தன் திறந்து வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானிடம் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கப்படுவதால் பெருமளவு அன்னிய செலாவணி மிச்சமாவதாக தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் குழாய் மூலம் எரிவாயுவை வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் கொண்டு செல்லும் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post