அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் எடுத்த முடிவு, பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்திய அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் தினேஷ் கார்த்தியும், குர்னால் பாண்டியாவும் இருந்தனர். அப்போது கடைசி ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக், ரன் எடுக்க சந்தர்ப்பம் இருந்தும் ரன் ஓடாமல், குர்னால் பாண்டியாவை திருப்பி அனுப்பினார்.
கடைசியில் இந்திய அணி வெறும் 4 ரன்னில் தோல்வி அடைந்தது. மிகுந்த சர்ச்சையை உண்டாக்கிய இந்த சம்பவத்திற்கு தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். “ரன் ஓட மறுத்த நான், அடுத்த வரும் பந்துகளில் என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என எண்ணினேன், ஆனால் அன்றைய தினம் என்னோடைய நாளாக அமையவில்லை, பந்து வீச்சாளரும் யார்க்கர் போட்டதால் சிக்ஸர் அடிக்க கடினமாக இருந்தது. அதே சமயம் மறுதிசையில் இருந்த குர்னால் பாண்டியாவை நான் நம்பி இருக்க வேண்டும் அது என்னோடைய தவறு தான்… கிரிக்கெட்டில் இது அதிகம் நடக்க கூடியவை தான்.” என்று தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்தார்.
உலக கோப்பை அணியில் இடம்பெற தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post