2 கோடியே 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், திருச்சியை சேர்ந்த விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூரின் பேரளி டோல்கேட் அருகே பறக்கும் படையினர் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தங்கராஜ் வாகனத்தை சோதனை செய்ததில் 2 கோடியே 10 லட்ச ரூபாய் பணம் சிக்கியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்தப் பணம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள் நிறுவனங்களில் இருந்து எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நிர்வாகிகளுக்கு சொந்தமான பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Discussion about this post