வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மளிகை கடைக்காரரின் வீட்டில் கொள்ளை

வருமான வரித்துறையில் இருந்து வருவதாகக் கூறி வீடு, மளிகை கடைகளில் சோதனை செய்து பணம் மற்றும் நகைளை கொள்ளையடித்துச் சென்ற போலி ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூரில் சிவபிரகாசம் என்பவர் வீட்டில் முன்பு மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த செவ்வாய் கிழமை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அப்போது காரில் வந்த 4 மர்ம நாபர்கள் வருமான வரித்துறையில் இருந்து வருவதாக கூறி, கடையை மூடிவிட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வீட்டிலும் சோதனை செய்தனர். இதில் 3 லட்சம் ரூபாய் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கொரட்டூர் காவல் நிலையத்தில் சிவபிரகாசம் அளித்த புகாரின் பேரில் போலி ஆசாமிகள் என தெரியவந்தது. பின்னர், கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போலீசார், அயப்பாக்கத்தைச் சேர்ந்த முருகன், பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த சந்திரகுமார், கொரட்டூரை சேர்ந்த தீனதயாளன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

 

Exit mobile version