நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்கள் எந்ததெந்த வார்டுகளில் போட்டியிடலாம் என்பது தொடர்பான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வழங்கப்படும் இட ஒதுக்கீடானது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்பட்ட வேண்டும். அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள் உள்ளிட்டவற்றில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டீனை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் பொது பிரிவிற்கு 79 வார்டுகளும், பொது பிரிவு பெண்களுக்கு 89 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 வார்டுகளும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு 16 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post