மனிதனை விண்ணிற்கு அனுப்பும் திட்டத்தில், இந்திய விமானப்படையுடன் இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இஸ்ரோவின் கனவுத்திட்டமான மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள், பெங்களூரூ இஸ்ரோ நிறுவனம் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் துணையுடன் நடைபெற்று வருகிறது. வரும் 2021ஆம் ஆண்டு மூன்று இந்தியர்களை விண்ணிற்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், விண்வெளிக்கு அனுப்பப்படும் மனிதர்களின் சிறந்த நபரை தேர்வு செய்வது தொடர்பாக, இந்திய விமானப்படைக்கும், இஸ்ரோவிற்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி கபூர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, ககன்யான் திட்ட இயக்குனர் ஹட்டனிடம் ஒப்படைத்தார். இஸ்ரோ தலைவர் சிவன் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, விண்வெளிக்கு அனுப்பபடும் மனிதர்கள் தேர்வு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post