மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ககன்யான் திட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டுக்குள், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான இத்திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு பெண் வீரர் உள்பட 3 வீரர்கள் விண்வெளிக்கு செல்ல உள்ளார்கள். 7 நாட்கள் விண்வெளியில் தங்கி இருப்பார்கள். பின்னர், அரபிக் கடலை விண்கலம் வந்தடையும். மனிதர்களை அனுப்பும் முன்பு, ககன்யான் திட்டம், இரண்டு முறை ஆளில்லாமல் செயல்படுத்தப்பட உள்ளது. ககன்யான் திட்டம் நிறைவேற்றப்பட்டால், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கும்.
Discussion about this post