சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்த பாலஸ்தீனியர்களின் வீடுகளை இஸ்ரேலிய படைகள் இடித்து தரை மட்டமாக்கியது.
ஜெருசலேம் நகரை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இருநாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இதனால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஜெருசலேம் பகுதியில் எல்லை சுவருக்கு அருகே பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இருதரப்புக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக சச்சரவு நிலவு வந்தது. தற்போது, குடியிருப்பு சட்ட விதிமுறைகளுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வந்த நிலையில், சர்ச்சைக்குரிய குடியிருப்புகளை வெடி வைத்தும் இடித்தும் இஸ்ரேலிய படைகள் தடை மட்டமாக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான இஸ்ரேலிய ராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.