கனா திரைப்படத்தின் வெற்றி விழாவில் ‘சில படம் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்’என ஐஸ்வர்யா ராஜேஷ் நக்கலாக கூறினார். தற்போது அப்படி பேசியதற்காக தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண் காமராஜ் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான படம் தான் ‘கனா’. சமீபத்தில் ‘கனா ‘திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய போது, குறைந்த திரையரங்குகள் கிடைத்தாலும் இந்த படம் வெற்றி படமாக உருவாவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொண்டார். மேலும் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த சிவகார்த்திகேயனுக்கும், அருண் காமராஜூக்கும் நன்றி தெரிவித்தார்.
பின்னர் சிரித்துகொண்டே ‘சில படம் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்’என நகைச்சுவையாக கூறினார். பின்பு ‘ஒரு தென்றல் புயலாகி வருதே’ என்ற பாடல் அரங்கில் ஒலிக்கப்பட்டது. அதனால் அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.
தனது சர்ச்சையான பேச்சிற்கு தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். ‘நான் யார் மனதையும் காயப்படுத்துவதற்கு பேசவில்லை. நான் நகைச்சுவையாக தான் சொன்னேன். எல்லா படமும் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைப்பேன். ஒரு படத்தை எடுத்து அதனை வெற்றி பெற வைப்பது எவ்வளவு கடினம் என எனக்கு தெரியும். நான் எந்த படத்தையும் குறிப்பிட்டு கூறவில்லை எனவும், நான் பேசியதால் யாராவது காயப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என கூறியுள்ளர்.
Discussion about this post