ஈஷா அறக்கட்டளை சார்பில் 242 கோடி மரங்களை நடும் பணிகளுக்கு, தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், ஈஷா அறக்கட்டளை சார்பாக, “காவிரி கூக்குரல்” என்ற தலைப்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில், அமைச்சர்கள் தங்கமணி மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கமணி, எதிர்கால சந்ததியை பாதுகாக்க தமிழக அரசு மரம் நடும் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டதாக தெரிவித்தார். தமிழகத்தில் குடிநீர் பணிகளுக்காக, ஆண்டுதோறும் 2 ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு செலவு செய்து வருவதாக கூறிய அமைச்சர், மரம் நடும் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முழு ஆதரவு அளித்திருப்பதாக தெரிவித்தார்.
Discussion about this post