நீதிமன்ற ஆணையை மீறி 100 சதவீத கல்வி கட்டணங்களை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்த விவரங்களை அனுப்பும்படி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறையின் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், உயர்நீதிமன்ற ஆணையின்படி தனியார் பள்ளிகள் 100 சதவீத கல்வி கட்டணங்களை செலுத்தும்படி பெற்றோர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 100 சதவீத கல்வி கட்டணத்தை செலுத்தும்படி கட்டாயப்படுத்துகின்ற பள்ளிகள் குறித்த பட்டியலும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பட்டியல் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post