திருவாதிரை நட்சத்திரம் வெடித்து சிதற போகிறதா ?

திருவாதிரை நட்சத்திரம் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மிகவும் முக்கியமான நட்சத்திரம். அந்த திருவாதிரை நட்சத்திரம் வெடித்து சிதற இருப்பதாக கடந்த சில நாள்களாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வெடித்து சிதறுமா திருவாதிரை?

விண்வெளியில் பல்லாயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன. நம் சூரியனும் ஒரு விண்மீன்தான். ஒவ்வொரு விண்மீனும் ஒரு சூரியன்தான். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கோள் மண்டலங்கள் இருக்கக்கூடும். மனிதர்களுக்கு இருப்பதைப் போல் விண்மீன்களுக்கும், குழந்தைப் பருவம், வளர்ச்சி, முதுமை ஆகியவை உண்டு.
 
அளவில் மிகவும் பெரியதாக உள்ள விண்மீன்கள் அதன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் ஊதிப் பெருத்து கடைசியில் வெடித்துச் சிதறும் நிகழ்ச்சிப் போக்கை சூப்பர் நோவா’ என்பார்கள். அவ்வாறு வெடிக்கும் போது அந்த விண்மீன் பிரகாசம் மங்கும்.
 
அதனை போலவே திருவாதிரை Betelgeuse என்பது விண்வெளியில்  சூரியனைப் போல பல்லாயிரம் மடங்கு பெரியதாகும். சுருங்கி விரியும் தன்மையை கொண்டது இது சூப்பர் நோவா விண்மீன். 1 லட்சம் ஆண்டில் இது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறி வந்த நிலையில் திருவாதிரை நட்சத்திரம் வெடிக்காது என்று அண்மையில் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version