இந்தியாவை சேர்ந்தவர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, வாட்ஸ் அப் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
வாட்ஸ் அப் செயலியில் ‘பெகாசஸ்’ என்ற வேவுபார்க்கும் மென்பொருளை பயன்படுத்தி 1,400 வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடியதாக இஸ்ரேலை சேர்ந்த நிறுவனத்தின் மீது பேஸ்புக் குற்றம்சாட்டியது. தூதர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அரசு உயரதிகாரிகளின் வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் தகவல்களும் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தகவல் திருட்டு தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
Discussion about this post