அமெரிக்காவில் அவசர நிலை கொண்டு வர ஆலோசித்து வருவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்பு சுவர் கட்டியே தீருவேன் என அதிபர் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார். இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் அமெரிக்க அரசு கடந்த 20 நாட்களாக முடக்கத்தை சந்தித்துள்ளது.
அரசு முடக்கத்தை போக்குவதற்காக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்புடன், ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனிடையே டெக்சாஸ் மாநிலத்தில் அதிபர் ட்ரம்பிடம் “எல்லையில் சுவர் கட்டுவதற்காக அவசரநிலை அறிவிக்கும் திட்டம் ஏதும் உள்ளதா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த டிரம்ப், அவசரநிலை கொண்டு வருவது பற்றி ஆலோசித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
Discussion about this post