ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கும் வரையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி அறிவித்துள்ளார்.
ஈரான் ஏவுகணை சோதனைகளில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஈரான் ஸ்பேஸ் ஏஜன்சி, ஈரான் ஸ்பேஸ் ரிசர்ச் சென்ட்டர் மற்றும் ஆஸ்ட்ரோ நாட்டிக்ஸ் ரிசர்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆகியவைக்கு தடை விதித்ததுள்ளது. மேலும் ராக்கெட் சோதனைகளை ஈரான் கைவிட வேண்டும் என்றும் அமெரிக்கா எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில், ஈரான் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதனை ஈரான் அரசு மறுத்துள்ளது. ஈரான் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்கும் வரை எந்த விதமான பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி அறிவித்துள்ளார்.
Discussion about this post