அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ.வுக்கு உளவுப்பார்த்து வந்த 17 பேரை கைது செய்துள்ளதாக ஈரான் அறிவித்த நிலையில், அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் கைவிடப்பட்டதையடுத்து ஈரான் அணு ஆயுத தயாரிப்பை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்நிலையில், ஈரான் நாட்டில் செயல்பட்டுவந்த அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பை சேர்ந்த கூலிப்படையினர் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எனினும் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ளவர்களின் சிலரின் புகைப்படங்களை ஈரான் வெளியிட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கே இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post