12-ஆவது ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா 48 ரன்கள் எடுத்தார்.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடிய பெங்களூரு அணி இறுதி வரை, போராடி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அபாரமாக ஆடி 70 ரன்கள் எடுத்த டி வில்லியர்ஸின் ஆட்டம் வீணானது. இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் 46 ரன்கள் எடுத்ததன் மூலம் விராத் கோலி ஐபிஎல் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை புரிந்தார்.
Discussion about this post