பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 39வது ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.
ஏற்கனவே இரு அணிகளும் மோதிய முதல் லீக் போட்டியில் சென்னை அணி மிக எளிதாக வெற்றி பெற்றது. மேலும் சென்னை அணி இதுவரைத் தான் பங்கேற்ற 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்னும் 5 லீக் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் ஏதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும். அதே சமயம் பெங்களூர் அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எனவே இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதனால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பெங்களூர் அணி களமிறங்குகிறது. காயம் காரணமாக சென்ற போட்டியிலிருந்து விலகி இருந்த சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தப் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post