ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டம் சமன் ஆனதை தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 10வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா வீரர்கள் டெல்லி அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. 6வது விக்கெட்டுக்கு இணைந்த தினேஷ் கார்த்திக்கும் ஆந்த்ரே ரஸ்ஸெலும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடிய ரஸ்ஸேல் 28 பந்துகளில் 62 ரன்னும், தினேஷ் கார்த்திக் 50ரன்னும் குவித்தனர். 20 ஓவர் முடிவில், கொல்கத்தா 185 ரன்கள் குவித்தது.
186 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய டெல்லி அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நிலையில் ப்ரித்திவ் ஷா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். சிறப்பாக விளையாடிய ப்ரித்வி 99 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். கடைசி ஓவரில் ஓவரில் 6 ரன்கள் தேவைபட்ட நிலையில், டெல்லி அணி 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதனையடுத்து சூப்பர் ஓவரில், டெல்லி அணி ஒரு விக்கெட்டை இழந்து 10 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டை இழந்து 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், டெல்லி அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடி 99 ரன்கள் குவித்த ப்ரித்வி ஷா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Discussion about this post