2020 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் மிகவும் விறுவிறுப்பாக கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார் ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ். இவரைக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதேபோல், இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கனையும் 5.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வலுக்கான அணிக்கான சிறந்த வீரர்களை தேர்ந்தெடுக்க தவறி விட்டனர் என்று கவுதம் காம்பீர் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
ரூ.15.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ், புதுப்பந்தில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றக் கூடியவர்தான். ஆனால், டெத் ஓவர்களில் எப்படி வீசுவார் என்ற கவலைப் பெரிதும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி உள்ளார். தற்போது, மிகப்பெரிய அளவில் முதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதிக தொகைக்கு அவர் ஏலம் போயிருப்பதால் மூன்று அல்லது நான்கு போட்டிகளை, தனி ஒருவராக விளையாடி அணிக்கு வெற்றியை தேடிக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.
ஆனால், டாப் ஆர்டர் வீரர்களான சுனில் நரைன், மோர்கன், அந்த்ரே ரஸல் ஆகியோர்களுக்கு பதில் பேக்அப் வீரர்கள் அணியில் இல்லை. மேலும், தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது மோர்கன் போன்ற வீரர் காயம் அடைந்தால், நடுவரிசையில் அவருக்கு பதிலாக விளையாடுவதற்கு மாற்று வீரராக வெளிநாட்டு வீரர் யாரும் இல்லை என்று குறிப்பிட்ட காம்பீர், மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகிய ஒருவரை ஏலத்தில் எடுத்திருக்கும் பட்சத்தில் அணி வலுவானதாக இருந்திருக்கும்.
தொடரின்போது, கம்மின்ஸ்க்கு காயம் அடையும் வேளையில் மற்றொரு வீரரான பெர்குசன் மாற்று வீரராக களமிறக்கப்படலாம். ஆனால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மாற்று வீரர்கள் இல்லை’’ என்று அவர் குறிப்பிட்டார்.