ஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டியில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கருணால் பாண்டியா 37 ரன்களும், அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டிய 15 பந்துகளில் 32 ரன்களையும் குவித்தனர். 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவான், பிரித்வி ஷா சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
35 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான், ராகுல் சஹார் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷிரேயாஸ் ஐயர், கொலின் முன்ரோ, ரிஷப் பண்ட் ஆகியோர் பெரிதாக சோபிக்காமல் போகவே 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Discussion about this post